சென்னை: ஒரு லட்சம் டன் கச்சா எண்ணை உடன் ரஷ்யகப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இதன்முலம் எரிபொருள் தேவையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈரான், அமெரிக்க ஆதரவு நாடுகளில் உள்ள எண்ணை கிடங்குகள்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தனது நாட்டின் அருகே உள்ள ஹாமோஸ் வழிப்பாதையை மூடி, சரக்கு கப்பல் போக்குவரத்தை தடை செய்து வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றிவந்த கப்பல்கள் கடலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் ரஷ்யாவில் இருந்து கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸை கடந்துவர ஈரான் அனுமதி அளித்திருக்கிறது. மேலும், தங்கள் நாட்டுடன் நட்புறவில் இருக்கும் நாடுகளுக்கு ஹார்முஸ் வழி திறந்தே இருக்கும் எனவும் ஈரான் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், 48 மணிநேரத்துக்குள் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் நிலையங்களை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதற்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அவர்களுடைய நட்புறவு நாடுகளிலுள்ள கடல்நீரை நன்னீராக்கும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானும் பதில் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையை குறைக்கவேண்டுமென்ற இந்தியாவின் வேண்டுகோளை ரஷ்யா நிராகரித்த நிலையில், அந்நாடு நியமித்த விலைக்கே அங்கிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவருகிறது இந்தியா. அதன் ஒரு பகுதியாக, ரஷ்யா நகோட்கா ஆங் துறைமுகத்திலிருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி புறப்பட்ட நோபிள் வாக்கர் கப்பல், நேற்று (மார்ச் 22) சென்னை துறைமுகம் வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து சிரியஸ் 1 என்ற மற்றொரு கப்பலும் இன்னும் சில தினங்களில் சென்னை துறைமுகம் வந்தடைய உள்ளது. மேலும், வருகிற 25, 26, 27 மற்றும் 29ஆம் தேதிகளில் கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்னை துறைமுகத்தை வந்தடையவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் கியாஸ் மற்றும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் தற்போது இந்தியாவில் வந்திறங்குகிற கச்சா எண்ணெயால் இங்கு சூழல் சற்று சமாளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]