டெல்லி:

திரிணமுல்    காங்கிரஸ்   பெண் எம்.பி தோலா சென்   இன்று டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றார். அவருடன் அவரது வயதான தாயும் உடன் வந்தார். அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து விமானத்திற்கு வந்தார்.

விமானத்தில் எம்.பி.யின் தாய் அவசர வழி அருகே உள்ள இருக்கையில் உட்கார்ந்திருந்தார். விமான பாதுகாப்பு விதிகளின் படி அவசர வழி அருகே வயதானவர்கள் உட்கார்ந்து பயணம் செய்யக் கூடாது.

அவசர காலத்தில் இந்த வழியின் அருகே உள்ள இருக்கையில் இருப்பவர் தான் அதிக எடையுள்ள அவசர கதவை திறக்க வேண்டும். அதனால் வயதானவர்களால் இது இயலாது என்பதால் அவர்கள் அவசர வழி அருகே அமர விமான பாதுகாப்பு விதி அனுமதிக்கவில்லை.

இந்த வகையில் அவரை வேறு இருக்கைக்கு மாற்றிக் கொள்ளும்படி விமான சிப்பந்திகள் கூறினர். ஆனால் இதற்கு மறுத்த எம்.பி. விமான சிப்பந்திகளுடன் தகராறில் ஈடுபட்டனார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் தாமதமானது.

சமீபத்தில் தான் ஏர் இந்தியா விமான மூத்த ஊழியர் ஒருவர் சிவசேனா எம்பி ரவீந்திர கெய்வாத்தான் தாக்கப்பட்டார். இதனால் இந்த எம்.பி. விமானத்தில் பறக்க 7 விமான நிறுவனங்கள் தடை விதித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இதற்காக ரவீந்திரா மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த பிரச்னை அடங்குவதற்குள் தற்போது இரண்டாவது சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். ஊழியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.