ஷாம்லி:
உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பட்டாசு வெடிப்பது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
இதுமட்டுமின்றி ஷிவ் காலனி பகுதியில் ஒருவரையொருவர் கல் வீசி தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், காயமடைந்த சஞ்சீவ் சைனி மற்றும் ராகுல் ஆகியோர் காயம் அடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், அங்கு சைனி இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
[youtube-feed feed=1]