சென்னை:
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகம் சில மாவட்டங்களில் ஏற்கனவே அமல்படுத்தி உள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் அமலுக்கு வருவதாக அமைச்சர் காமராஜ் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் குடும்ப அட்டை மூலம், நாட்டில் எந்தவொரு பகுதியிலும் உள்ள எந்த கடையிலும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், சில மாநிலங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளன. தமிழகத்திலும் பரிசார்த்த முறையில் சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது.
இது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதாவும். நடைமுறை சிக்கல் ஏதும் ஏற்படவில்லை என்பதால், வரும் ஏப்ரல் 1ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரே கார்டு, ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார்.