சென்னை:
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகம் அமல்படுத்தி உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் குடும்ப அட்டை மூலம், நாட்டில் எந்தவொரு பகுதியிலும் உள்ள எந்த கடையிலும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது.
இந்த திட்டம் வரும் ஜூன் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் ஏற்கனவே மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்கள் சேர்ந்துள்ள நிலையில், தற்போது பரிசார்த்த முறையில் தமிழகமும் இணைந்துள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.