டெல்லி: நடப்பாண்டில் ஒன்றரை லட்சம் வழக்குகள் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாக உச்சநீதி மன்றம் தகவல் தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் நீதிமன்ற பணிகளும் பாதிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தின் முதல்நாள் மட்டும் முக்கிய வழக்குகள் கடும் கட்டுப்பாடுகளுடன், வழக்கு தொடர்பான ஒருவர் மட்டுமே நீதிமன்ற விசாரணை அறைக்குள் செல்ல அனுமதித்து விசாரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, முக்கிய வழக்குகள் காணொளி காட்சி மூலம் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தன.
நடப்பாண்டில், கொரோனா 2வது அலையின்போதும், வழக்கு விசாரணைகள் அனைத்தும் காணொளி காட்சி மூலமே விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் தொற்று பரவல் குறையத்தொடங்கியதும், அக்டோபர் 8ந்தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டில் மட்டும் ஒன்றரை லட்சம் வழக்குகளின் விசாரணைகள் காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டு இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.