பக்கூ
அசர்பைஜானை சேர்ந்த பாராலிம்பிக் வீராங்கனை ஹஜியேவா வுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் டோக்கியோ வில் நடந்த பாரலிம்பிக் போட்டியில் அசர்பைஜானை சேர்ந்த ஜூடோ வீராங்கனை ஷஹானா ஹஜியேவா, பார்வையற்றோர் பிரிவில் தங்கம் வென்றுள்ளர், இவருக்கு பார்வை குறைவு உள்ளதாக கூறி போட்டியில் கலந்துக் கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உலக பாரா ஜூடோ சாம்பியன்ஷிப் தகுதி மருத்துவ பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளார். பரிசோதனையில், ஹஜியேவாவுக்கு முழு பார்வை இருப்பது கண்டறியப்பட்டதால், 24 வயதான இவர் பாரா விளையாட்டில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளார். இதற்கு அசர்பைஜானின் தேசிய பாராலிம்பிக் குழு (NPC) விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றத்ம் காரணமாகக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் B1, B2, B3 என மூன்று பிரிவுகள் இருந்தன. பாரிஸ் பாராலிம்பிக்ஸில் J1, J2 என புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இதில், J2 பிரிவில் இருந்த பல கண் நோய்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக NPC தெரிவித்தது. 2024 வரை J2 பிரிவில் போட்டியிட்ட ஹஜியேவா, புதிய விதிமுறைகளால் இனி பாரா ஜூடோவில் பங்கேற்க முடியாது என்று அரிவிக்கப்பட்டுள்ளது