மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ம் தேதி வீர வசந்தராயர் மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. இது பக்தர்களை கவலை அடைய செய்துள்ளது.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.