சென்னை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்புகளுக்கு காம்போ ஆஃபர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மூன்று வகையான சுவிட்டுகளுக்கு Combo Offer-கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அக்டோபர் 31ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஆவின் இனிப்புகளுக்கு சிறப்பு சலுகை அறிவித்து உள்ளது.
அதன்படி,
மைசூர்பாக் (250 கி), மிக்சர் (200 கி), 2 ஆவின் குக்கீஸ் (80 கி), 1 சாக்லேட் (14 கி) உள்ளிட்டவை அடங்கிய காம்போ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோல,
பாதாம் மிக்ஸ் (200 கி), நெய் பாதுஷா (250 கி), மிக்சர் (200 கி), குலாப் ஜாமூன் (250 கி), 1 சாக்லேட் (25 கி) உள்ளிட்டவை அடங்கிய காம்போ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், முந்திரி அல்வா (250 கி), காஜூ கட்லி (250 கி), காஜூ பிஸ்தா ரோல் (250 கி), நெய் பாதுஷா (250 கி) உள்ளிட்டவை அடங்கிய காம்போ ரூ.900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் சுவிட்டுகள் அனைத்தும் ஆவின் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம் என்றும், இந்த சிறப்பு சலுகை இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று தொடங்கி தீபாவளி வரை நீடிக்கும் என ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது.