டில்லி
இந்த 2019 ஆம் வருடப் பிறப்பன்று இந்தியாவில் சுமார் 70000 குழந்தைகள் பிறந்துள்ளன.
ஐநாவின் குழந்தைகள் நல இயக்கமான யுனிசெஃப் நிறுவனம் குழந்தைகள் உரிமைகளை நிர்ணயம் செய்து நேற்றுடன் 30 வருடங்கள் முடிவடைந்துள்ளது. அதை ஒட்டி உலக நாடுகளில் உள்ள குழந்தைகளின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை யுனிசெஃப் நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2017 ஆம் வருடம் உலகெங்கும் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பிறந்த அன்றே மரணம் அடைந்துள்ளன. அத்துடன் சுமார் 1 மாதம் வரையிலான 25 லட்சம் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளன. ஆகவே அனைத்து நாடுகளிலும் தற்போது குழந்தைகள் மரணம் அடைவதை தடுக்க தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பெரும்பாலான தாய்மார்கள் தங்களின் குழந்தைகள் ஜனவரி 1 ஆம் தேதி பிறக்க வேண்டும் என ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் உலகெங்கும் உள்ள தாய்மார்களில் 3.95.072 பேர் தங்கள் குழந்தை அந்த தேதியில் பிறக்க ஆசை கொண்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 70.000 குழந்தைகள் அன்று பிறக்கும் எனவும் அதில் உத்திரப் பிரதேசத்தில் 16000 எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
ஆனால் யுனிசெஃப்ல் நிறுவன அதிகாரி யாஸ்மின் எதிர்பார்த்ததை விட குறைவாக அன்று குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று 69,944 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளதாக அதிகார்பூர்வமற்ற தகவல்கல் தெரிவிக்கின்றன.