ஞ்சிம்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் வரும் 30 ஆம் தேதி அம்மாநில நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கணையப் புற்று நோயால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் துயருற்று வந்தார். அவருக்கு கோவா, மும்பை, டில்லி, நியூயார்க் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கபட்டது. தற்போது அவர் கோவாவில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்திகாமல் உள்ளார் எனவும் நிதிநிலை அறிக்கை தொடர்பான குழுக் கூட்டத்துக்கு வரவில்லை எனில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

இந்நிலையில் நிதிநிலை அறிக்கை குறித்த கூட்டம் நேற்று நடந்தது. அதில் முதல்வர் மனோகர் பாரிக்கர் கலந்துக் கொண்டார். அவருடன் சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து குழு உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவா சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தொடர் குறித்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. கூட்ட முடிவில் துணை சபாநாயகர் மைக்கேல் லோபியா செய்தியாளர்களை சந்தித்தார்.

மைக்கேல் லோபோ, “கோவா சட்டப்பேரவையின் நிதிநிலை கூட்டத் தொடர் வரும் 29 ஆம் தேதி ஆளுநர் மிருதுளா சின்காவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதற்கு அடுத்த நாளான ஜனவரி 30 அன்று கோவா மாநில முதல்வரும் நிதி அமைச்சருமான மனோகர் பாரிக்கர் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார். ஜனவரி 31 ஆம் தேதி அன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு பிறகு அது நிறைவேற்றப்படும். “ என தெரிவித்தார்.

இந்த குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர், “காங்கிரஸ் கட்சியினரான நாங்கள் இந்த நிதிநிலை அறிக்கைத் தொடர் குறைந்தது 10 நாட்களாவது நடக்க வேண்டும் என விரும்புகிறோம். சென்றவருடம் 16 நாட்கள் நடந்த போதிலும் முழுமையாக விவாதிக்க முடியவில்லை. இந்நிலையில் நான்கு நாட்கள் கூட நடைபெறவில்லை. அதிலும் முதல்நாள் கவர்னர் உரைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார்.