க்னோ

ரும் பிப்ரவரி 4 ஆம் தேதி பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் லக்னோவில் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராகவும் கிழக்கு உத்திரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராகவும்  நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு உத்திரப் பிரதேச மாநிலம் மிகவும் பரிச்சயமானதாகும்.   முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்காக அமேதியிலும் ரேபரேலியிலும் அவர் தேர்தல் பணி ஆற்றி உள்ளார்.

கட்ந்த 1999 ஆம் வருட மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் தனது தாய் சோனியா வெற்றி பெற பிரியங்கா தனது கடின உழைப்பை அளித்தார்.  அப்போது அவர் அமேதியில் இரு வாரங்கள் தங்கி இருந்து தேர்தல் பணி ஆற்றினார்.   அந்த தேர்தலில் சோனியா காந்தி மிகவும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சோனியா மற்றும் ராகுல் நாடெங்கும் காங்கிரசுக்காக பிரசாரம் செய்தனர்.   அப்போது அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளையும் பிரியங்கா கவனித்துக் கொண்டார்.   மோடி அலையால் பல காங்கிரஸ் கட்சியின் பல பிரபலங்கள் தோற்ற  போதிலும் சோனியாவும் ராகுலும் உத்திரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றதற்கு பிரியங்காவின் பணியே முக்கிய காரணம் ஆகும்.

லக்னோவில் வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி அன்று பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் இணைந்து ஒரு  பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.     இது அவர்கள் இருவரும் இணைந்து நடத்தும் 2 ஆம் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகும்.

கடந்த 2004 ஆம் வருடம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரியன்க்க கந்தி ராகுல் காந்தியின் அரசியல் நுழைவு குறித்து தகவல் தெரிவித்தார்.   அத்துடன் ராகுலை அமேதி தொகுதியின் வேட்பாளராகவும் அறிமுகப்படுத்தினார்.

தற்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகி உள்ளதால் வரும் 4 ஆம் தேதி சந்திப்பில் அவர் பிரியங்கா காந்தியை பொதுச் செயலர் என அறிமுகப் படுத்த உள்ளார்.