சென்னை: தமிழகஅரசு அனுமதி வழங்கியபடி, வரும் 7-ந்தேதி முதல், தமிழகத்தில் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் செப்டம்பர் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் பொதுப்போக்குவரத்து, ரயில்சேவைக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில், ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயத்தில் முதல்வர் 2 காலாண்டு சாலை வரியை தள்ளுபடி செய்வதோடு, மேலும் சில கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்திடவேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளார்.