கோழிக்கோடு:
ஜனவரியில் ஒமைக்ரான் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 24-ந் தேதி முதன்முதலாகத் தென் ஆப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்ட ஒமைக்ரான், அதற்குள்ளாக 79 நாடுகளுக்குப் பரவியுள்ளது.
டெல்டா வைரசுடன் ஒப்பிடுகிறபோது 70 மடங்கு வேகத்தில் பரவும், இதன் பாதிப்பு உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் கோழிக்கோட்டில் அமைந்துள்ள கே.எம்.சி.டி. மருத்துவக் கல்லூரியில் ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் உத்திகள் பற்றி இணைய வழியில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பிரபல தொற்றுநோய் நிபுணரும், தேசிய தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகருமான மருத்துவர் நரேஷ் புரோகித் பங்கேற்றார். இந்தக் கருத்தரங்கில் அவர் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டார்.
அதில், ஒமைக்ரான் பரவல் வேகம் டெல்ட்சா வைரசை விட அதிகம் என்றும், ஜனவரியில் ஒமைக்ரான் அலை வீசக்கூடும் என்றும் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel