ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தாடியுடன் காட்சிதரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு 5ந்தேதி ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக அம்மாநில முன்னாள் முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
எப்போதும் இளமையுடன் , கிளின் சேவ் செய்த நிலையில் சிரித்த முகத்துடன் காணப்படும் ஓமர் அப்துல்லா வீட்டுக்காவலில் தாடி மீசையுடன் இருக்கும் புகைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சமூக வலை தளங்களிலும் வைரலானது.
இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மத்திய பாஜக அரசுக்கு அரசியல்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது, மருத்துவர் ஒருவருடன் மீசை தாடியுடன் கண்ணாடி அணிந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி, வைரலாகி வருகிறது….
[youtube-feed feed=1]