ண்டர்பால்

காஷ்மீர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பாஜக முயல்வதாக உமர் அப்துல்லா கூறி உள்ளார்

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன இங்கு சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெற இருக்கிறது.  வரும் 18-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், 25-ம் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ம் தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று  ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார்ர்.

நேற்று கண்டர்பால் தொகுதியில் தேசிய மாநாடு கட்சி சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கட்சி தொண்டரகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு உமர் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது உமர் அப்துல்லா செய்தியாளர்ளிடம்,

“காஷ்மீரில் எவ்வளவு சுயேச்சைகளை வெற்றி பெறச் செய்ய முடியுமோ அவ்வளவு சுயேச்சைகளை வெற்றி பெற வைக்க பாஜக  முயல்கிறது. இதனால் தங்கள் அரசாங்கத்தை அமைக்கள் அவர்கள் (பா.ஜ.க.) முயற்சிக்கிறார்கள். வாக்காளர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள், தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது பா.ஜ.க.வோ அல்லது அவர்களின் சூழ்ச்சிகளோ வெற்றி பெற்றிருக்காது”

என்று கூறி உள்ளார்.