சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை அடுத்து, நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிநாட்டுவாழ இந்தியர்களை பணி நீக்கம் செய்ய ஓமான் அரசு உத்தர விட்டுள்ளது.
கடந்த ஜனவரி 10-ஆம் தேதி மறைந்த சுல்தான கபூசின் ஆட்சியில், ஓமானில் உள்நாட்டு மக்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் ஓமானிசேஷன் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இந்த உத்தரவை, தீவிரமாக கடைபிடிக்கும் முயற்சியாகவே இந்த பணி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிதுள்ளனர். இந்த நடவடிக்கையால், தனியார் துறையினர் உடனடியாக பாதிக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.
இந்த உத்தரவு கடந்த புதன்கிழமை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிதி வழிகாட்டுதலின் ஒரு பகுதியாகவே வெளியாகியுள்ளது. இது ஓமான் பொருளாதாரத்தை உள்நாட்டுமயமாக்கலாக மாற்ற வழி வகை செய்துள்ளது.
சில மதிப்பீடுகளின்படி, ஓமானின் வசிக்கும் 4.6 மில்லியன் குடியிருப்புவாசிகளில், மூன்றில் ஒரு பகுதியினர் அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணி நீக்க உத்தரவால் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பாதிகப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. தற்போது அரசு துறையில் மட்டுமே அமல் படுத்தப்பட உள்ள இந்த பணி நீக்க உத்தரவு, படிபடியாக தனியார் நிறுவனங்களுக்கும் பின்பற்ற அரசு அழுத்தம் கொடுக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
ஓமான் கடந்த சில மாதங்களாக பொதுத்துறையில் புதிய சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு புதிய திட்டங்களைத் தவிர்க்குமாறு, அனைத்து மாநிலத் துறை நிறுவனங்களையும் ஓமான் நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டதோடு, 2020 ஆம் ஆண்டில் செயல்பாட்டு மற்றும் நிர்வாகச் செலவுகளை 10% ஆகக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டது. உலக எண்ணெய் விலை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக ஓமான் இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஓமான் இந்தியாவின் நாடுகள் இடையே நல்ல நட்புறவு நிலவி வருகிறது. இந்நிலையில் இங்கு பணியாற்றி வரும் ஏராளமான உள்ளூர் தொழிலாளர்கள், தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. வளைகுடாவில் கொரோனா தொற்றுநோய் தொடர்பான பொருளாதார வீழ்ச்சியுடன் இந்த உத்தரவு இணைக்கப்படவில்லை என்று ராஜாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
ஓமானின் அதிகாரப்பூர்வ கொள்கைகளை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் கூறுகையில், “படித்த மற்றும் வீட்டில் வேலை தேடும் ஓமன் நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியே இந்த வெளிநாட்டுவாழ் மக்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவு என்று தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 7-ஆம் தேதி சுல்தானுடன் இரு நாடுகளுக்கும் தொற்றுநோயால் ஏற்படும் சவால்களைப் பற்றி விவாதித்தார். தொடர்ந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஓமன் குடிமக்களுக்கு, இந்தியா அளித்த ஆதரவுக்கு ஓமானின் ஆட்சியாளருக்கு மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.