சென்னை: தமிழ்நாடு அரசு ராமநாதபுரத்தில் செயல்படுத்த உள்ள ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமிக்கான டெண்டர் கோரியுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் ரூ. 42 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு. டெண்டர் கோரியுள்ளது
ராமேசுவரம் அருகே தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.42 கோடியில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் நீர் விளையாட்டு வல்லுநர்கள் மூலம் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்க தமிழக அரசு ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனுடன் படகு நிறுத்தும் இடம், கட்டுப்பாட்டு மையம், பணிமனை (work shop) , உடற்பயிற்சி கூடம், யோகா மையம், பொருட்கள் வைக்கும் அறை, தங்கும் அறை, உணவுக் கூடம் ஆகியவைகள், இவ்விளையாட்டு அகாடமியில் அமைய உள்ளன.
மேலும், பாய்மரப் படகு, மரத்தான் நீச்சல் உள்ளிட்ட ஒலிம்பிக் நீர் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பயிற்சி மையம் மற்றும் கட்டுமான பணிகளுக்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கிய நாளிலிருந்து, 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ராமேசுவரம் அருகே ரூ.44 கோடியில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்!