ரியோடிஜெனிரோ:
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் ஜுவாலாகட்டா, அஸ்வினி பொன்னாப்பா ஜோடி தோல்வியடைந்தது.
அதேபோல், ஒற்றையருக்கான பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா மிஸ்ராவும் தோல்வியுற்றார்.
ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான பேட்மின்டன் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி 3வது முறையாக தோல்வியடைந்தது.
மகளிருக்கான பேட்மின்டன் இரட்டையர் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டிகள் 4 பிரிவுகளாக நடைபெற்று வந்தன. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜூவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி, தாய்லாந்து ஜோடியை இன்று எதிர்கொண்டது.
இந்த போட்டியில் தாய்லாந்து ஜோடி 17-21, 15-21 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடியை தோற்கடித்தது. இதன் மூலம் ஒலிம்பிக் பேட்மின்டன் தொடரில் இருந்து வெளியேறியது.
இன்று நடைபெற்ற ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் உக்ரைன் வீராங்கனை மரியா உல்டினாவுடன் இந்திய வீராங்னை சாய்னா நேவால் மோதினார். இன்றைய ஆட்டம் 39 நிமிடங்கள் மட்டுமே நடைப்பெற்றது.
இந்த போட்டியில், 21-18, 21-19 நேர் செட் கணக்கில் சாய்னாவை உக்ரைன் வீராங்கனை உல்டினா தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன் காரணமாக, சாய்னா மூலம் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் நிச்சயம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ரசிகர்களுக்கு நேவால், இன்று நடந்த போட்டியில் தோல்வியுற்று வெளியேறியது ஏமாற்றத்தையே தந்துள்ளது.
2012ல் லண்டன் நடைபற்ற ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்த் நாக்சு அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் பேட்மின்டன் தனிநபர் ஹச் பிரிவு போட்டியில் 2வது ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சுவீடனின் ஹர்ஸ்கைனை 21-6, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.