டில்லி

ரும் ஏப்ரல் முதல் 15 ஆண்டு பழமையான வாகனங்கள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் 8 மடங்கு உயர்கிறது.

மத்திய அரசு படிப்படியாக இந்தியாவில் பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது தொடர்பான புதிய விதிகள் தற்போது அறி முகம் செய்யப்பட்டுள்ளன.

அந்த விதிகளின்படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை புதுப்பிக்க வழக்கமான கட்டணத்தை விட8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலாகும் இந்த புதிய விதிமுறை என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி 15 ஆண்டுகளுக்கு மேலான காரின் பதிவைப் புதுப்பிக்க ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது இது ரூ.600 ஆக இருக்கிறது. இதேபோல், பழைய இரு சக்கர வாகனங்களின் பதிவை புதுப்பிக்க.ரூ.1,000 செலுத்த வேண்டும். இப்போது இதற்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது.

வாகனங்கள் வணிக பயன்பாட்டுக்கானது என்றால், பதிவைப் புதுப்பிப்பதற்கு ரூ.12,500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.  இதற்கு தற்போதைய கட்டணம் ரூ.1,500 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.