சென்னை

துரவாயல் – துறைமுகம் இரண்டு அடுக்கு மேம்பால திட்டத்துக்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தூண்கள் விரவில் இடிக்கப்பட உள்ளது.

சென்னையில் உள்ள கடும் போக்க்குரவரத்தை கடந்து சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் துறைமுகத்துக்கு செல்வதில் பல ஆண்டுகளாகச் சிரமம் இருந்து வந்தது.  எனவே சரக்கு வாகனங்கள் சென்னை துறைமுகத்துக்கு செல்லாமல் ஆந்திராவில் உள்ள துறைமுகங்களை நாட தொடங்கியதால் தமிழ்நாட்டிற்கான வருவாய் பாதிக்கப்பட்டது.

இதைத்  தவிர்க்க கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மதுரவாயல் முதல் எண்ணூர் துறைமுகம் வரை ரூ.1,815 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்தது. இதற்கான பணிகள் உடனுக்குடன் தொடங்கப்பட்டு மேம்பாலத்துக்கான தூண்களும் மதுரவாயல் பகுதிகளில் அமைக்கப்பட்டன.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படும் எனக்கூறி எண்ணூர் – மதுரவாயல் மேம்பால திட்டத்தைக் கிடப்பில் போட்டது.

சமீபத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.  இத்திட்டத்திற்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து முதல்கட்ட தயாரிப்புப் பணிகளில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மண்டல அதிகாரி இது குறித்து

“சுமார் 20.5 கி.மீ தூரமுள்ள இந்த மேம்பாலம் 9 கி.மீ. தூரம் சென்னை கூவம் நதி வழியாக செல்லும்.   இந்த கூவம் நதியோரம் பழைய மேம்பால திட்டத்துக்காக அமைக்கப்பட்டு உள்ள தூண்களை இடித்துவிட்டு புதிய தூண்களை கட்ட திட்டமிட்டு இருக்கிறோம்.  

தற்போது உள்ள இரட்டை அடுக்கு மேம்பால திட்டத்துக்கு. ஏற்கனவே  அமைக்கப்பட்டுள்ள தூண்கள் பயன்படாது என்பதால் ஒரு சில  தூண்கள் தவிர மற்றவை இடிக்கப்பட்டு புதிய தூண்கள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் துறை மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை பெற உள்ளோம்”

எனத் தெரிவித்துள்ளார்.