பாக்தாத்: ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில் ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சோல்மணி மற்றும் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவின் முக்கிய தளபதி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் காரணமாக அமெரிக்கா, ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதே வேளையில், சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
எண்ணெய் வளம் மிக்க ஈரானின் ராணுவ தளபதியை கொன்றுவிட்டதாக அமெரிக்கா தெரிவித்த பிறகே இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது. சர்வதேச விலையில் 63.84 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், 69.16 டாலர்களாக அதிகரித்தது. மத்திய கிழக்கு பகுதியில் மோதல் உருவாகலாம் என்ற அச்சமே விலை ஏற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.