இஸ்லாமிய கூட்டுறவு மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றதால் பாகிஸ்தான் அமைச்சர் மாநாட்டை புறக்கணித்துள்ளார்.

foreign

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் 1969ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா, ஆசிய நாடுகள் என மொத்தம் 57 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை காக்கவும் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் 46வது மாநாடு இன்று மற்றும் நாளை அபுநாபியில் நடைபெறுகிறது. இந்த கூட்டமைப்பில் இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த சில வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சில முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளனர். இதில் கவுரவ பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவிற்கு அழைப்பு விடப்பட்டது.

அதன்படி இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இஸ்லாமிய கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்றார். ஆனால், இஸ்லாமிய நாடானா பாகிஸ்தான் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. இந்தியா சார்பில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றதால் பாகிஸ்தான் வெளியுறவித்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி மாநாட்டில் கலந்துக் கொள்ளாமல் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இதைதொடர்ந்து, இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு கூட்டத்தில் இன்று பங்கேற்ற சுஷ்மா சுவராஜ், இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சுஷ்மா சுவராஜ், “ இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் பிற மதத்தை சார்ந்த மக்களுடன் ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களில் சிலர் மட்டுமே பயங்கரவாதிகளின் நச்சுப்பிரசாரத்துக்கு இரையாகின்றனர். பயங்கரவாதம் பல உயிர்களை பலி வாங்குவதுடன், இந்த உலகத்தை அழிவுக்குள்ளாக்கி விட முயற்சிக்கிறது. பயங்கரவாதம் வளர வளர அதனால் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

sushma

எந்த வடிவத்தில் வந்தாலும், பயங்கரவாதத்தை ஒரு மதத்தை சீர்குலைக்கும் சக்தியாகவே நாம் பார்க்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான போரானது எந்த மதத்துக்கும் எதிரான போர் அல்ல. இஸ்லாமிய மதம் என்றால் அமைதி என்று பொருள். அல்லாவின் 99 திருநாமங்களில் எந்த பெயரும் பயங்கரவாதத்தை குறிக்கும் பெயரல்ல. மனிதநேயத்தை நாம் காப்பாற்ற வேண்டுமானால், தங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை உடனடியாக அழிக்க வேண்டும்.

உங்கள் மக்கள் மற்றும் உலகில் வாழும் அனைத்து மக்களிடையிலும் அமைதி, மதநல்லிணக்கம், மகிழ்ச்சி ஆகியவை என்றென்றும் தழைக்க இந்தியாவின் சார்பில் எங்களது மனமார்ந்த ஆதரவையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என சுஷ்மா பேசினார்.

இதற்கிடையில், இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அபுதாபி வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முஹம்மது குரைஷி அரங்கத்துக்கு இன்று வராமல் புறக்கணித்ததால் அவருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கை காலியாக கிடந்தது. கடந்த மாதம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடந்து இந்திய அபதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் விமானப்ப்டை மூலம் துல்லியத்தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இந்திய விமானியை பாகிஸ்தான் சிறைப்பிடித்ததால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.