மும்பை: எந்த இடத்திலும் தொழுகை நடத்துவவோம் என்பது மத உரிமை அல்ல என பம்பாய் உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. விமான நிலையம் அருகே தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

ரம்ஜான் இஸ்லாத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தபோதிலும், புனித மாதத்தில் எந்த இடத்திலும் தொழுகை நடத்துவோம் என்பது மத உரிமை அல்ல என்று கூறியதுடன், குறிப்பாக பாதுகாப்பு கவலைகள் அதிகமாக உள்ள விமான நிலையத்திற்கு அருகில் தொழுகை நடத்துவதற்கு மத உரிமை கோர முடியாது என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் டாக்ஸி ரிக்சா ஓலா-உபேர் ஆண்கள் டிரைவர் யூனியன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தற்போது ரம்ஜான் மாதம் நடைபெற்று வருகிறது. இதனால், விமான நிலைய வளாகத்தில் உள்ள காலி இடத்தில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி பி.பி. கொலபவல்லா மற்றும் நீதிபதி ஃபிர்தோஷ் பூனிவல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரித்து வந்தது. விமான நிலையத்திற்கு அருகில் முன்பு ஒரு தற்காலிக கொட்டகை இருந்ததாகவும், அங்கு அவர்கள் தொழுகை நடத்துவதற்கு முன்பு இருந்ததாகவும், ஆனால் அது கடந்த ஆண்டு அதிகாரிகளால் அகற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த இடத்திலும் தொழுகை நடத்துவது தானாகவே மத உரிமையாகக் கருதப்படாது என்று கூறியதுடன், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் தொழுகை நடத்த அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதுபோன்ற விஷயங்களால், பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது என்றும், செய்தது.
விமான நிலையப் பாதுகாப்பின் அம்சத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழுகை நடத்த விமான நிலையத்துக்கு அருகில் ஒரு கட்டிடத்தை வாங்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. மதம் அல்லது வேறு எந்த விஷயமோ பாதுகாப்பு தான் முதலில் வருகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]