புவனேஸ்வர்:

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வர் மற்றும் பத்ராக் நகரங்களில்   48 மணிநேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்று இரவு 8 மணி முதல் 5ந்தேதி இரவு 8 மணி வரை 48 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவாக மாநில தலைமைச்செயலாளர் ஏ.கே. திரிபாதி தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதுபோல மக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் ஒடிசா மாநில அரசு, குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு 48 மணி நேரம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உளளது.

மாநில தலைநகர் புவனேஸ்வர் மற்றும் பத்ராக்  பகுதிகளில் 48 மணிநேர அனைத்து முடக்க நடவடிக்கை அமலில் இருக்கும் என்நறும், நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துக் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று இரவு (வெள்ளிக்கிழமை) 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை இந்த 48 மணி நேர அனைத்து முடக்க நடைமுறை அமலில் இருக்கும்.

இந்த 48 மணி நேர அனைத்து முடக்க நடவடிக்கையானது மேற்குறிப்பிட்ட இரு நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி யுள்ள முழு முடக்கம்(Lockdown) அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.