புவனேஸ்வர்

டிசாவில் நிழல் முதல்வர் எனக் கூறப்பட்ட வி கே பாண்டியன் அரசியலில் இருந்து விலக உள்ளார்.

கடந்த 4 ஆம் தேதி வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இன்று பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் பதவி ஏற்க நரேந்திர மோடி  உரிமை கோரியதை அடுத்து அவர் இன்று பதவியேற்பை நடத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இம்முறை மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரா,  ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தலும் நடந்ததில் 25 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தை ஆண்டு வந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதளம் கட்சியை,  பாஜக வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது.  பிஜு ஜனதா தளம் கட்சி தோற்றதற்கு வி.கே.பாண்டியனே காரணம் என்று பலரும் கூறிவந்தனர்.  தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்றும் பேசப்பட்டது.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த  ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்,

“வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது.  நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள். 

கடந்த 10 ஆண்டாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக  செயலாற்றி உள்ளார்.  வி.கே.பாண்டியன் கடும் உழைப்பாளி.  கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது.  தேர்தலில் மக்களின் முடிவை பணிவோடு ஏற்றுகொள்கிறேன்”

என்று தெரிவித்தார்.

இன்று  வெளியிட்ட வி.கே.பாண்டியன்  வெளியிட்டுள்ள வீடியோவில்

”நவீன் பட்நாயக்கிற்கு உதவவே அரசியலுக்கு வந்தேன். பதவிக்காகவோ, பொறுப்புக்காகவோ அரசியலுக்கு வரவில்லை.  எனக்கு எதிரான பரப்புரை பிஜு ஜனதா தளத்தின் வெற்றியை பாதித்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அரசியல் முழுமையாக ஓய்வு பெற்றுக் கொள்கிறேன்”

எனத் தெரிவித்துள்ளார்.