ஒடிசா:
டிஷாவில் கொரோனா நிதி உதவியை பெற நேரில் வர வேண்டும் என்றதால் 100 வயதான தாயை கட்டிலில் படுக்க வைத்து வங்கிக்கு இழுத்துச் சென்றதாக அவரது மகள் கூறியுள்ளார்.

நாபரா மாவட்டத்தின் பார்கோன் கிராமத்தைச் சேர்ந்த புன்ஜிமாட்டி டேய் என்ற மூதாட்டி தனது தாயாரின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்திய கொரோனா கால நிதியான ஆயிரத்து 500 ரூபாயை எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார்.

ஆனால் 100 வயதான அவரது தாய் நேரில் வந்தால்தான் பணம் தர முடியும் என வங்கி அதிகாரி கூறியதாக தெரிகிறது. வீட்டில் படுத்த படுக்கையாய் கிடந்த தனது தாயை கட்டிலோடு சேர்த்து இழுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று புன்ஜிமாட்டி டேய் பணம் பெற்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது