ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் போது, போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர் இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் காயமடைந்தனர்.
மார்ச் 25ம் தேதி சட்டமன்ற கூட்டத்தின் போது சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர் மேலும், இரவு வரை உள்ளிறுப்புப் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராம சந்திர கடம், சாகர் சரண் தாஸ், மங்கு கில்லா, சத்யஜித் கோமாங்கோ, அசோக் குமார் தாஸ், தசரதி காமாங்கோ மற்றும் சோபியா ஃபிர்தவுஸ் உள்ளிட்ட 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசா சட்டமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.