புவனேஸ்வர்:

சிறுவர்கள்  பள்ளிக்கு செல்ல வசதியாக  மலையை குடைந்து 8 கி.மீ தூரம் வரை தனி மனிதர் ஒருவர் சாலை அமைத்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் கும்சகி என்னும் மலை கிராமத்தில் வசிப்பவர் ஜலந்தர் நாயக் இந்த மலைகிராம மக்கள் மருத்துவமனைக்கோ  அங்கன்வாடி,  அல்லது பள்ளிக்கு சென்றாலும் மலையை கடக்க வேண்டிய சூழல். இதற்கு சாலை  வசதி இல்லாததால் அந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை.

இந்த நிலையில் ஜலந்தர் நாயக் மலையை குடைந்து சாலை அமைக்க தீர்மானித்தார்.  தற்போது 8 கி.மீ தூரம் வரை கிராமத்திற்கும் நகரத்திற்கும் மலையை குடைந்து சாலையை உருவாக்கி உள்ளார்.

இது குறித்து ஜலந்தர் நாயக், “எங்கள் கிராமத்தில் அங்கன்வாடி மையமோ, மருத்துவமனையோ, பள்ளியோ இல்லை. இவற்றுக்கச் செல்ல வேண்டும் என்றால்  கடினமான மலைப்பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆகவேதான் அதனால் மலையை குடைந்து சாலையை அமைக்க முடிவு செய்தேன்” என்கிறார்..

ஊர் மக்களின் நன்மைக்காக ஒற்றை மனிதராக, மலையைக் குடைந்து சாலை அமைத்த இவர் வியக்க வைக்கும் மனிதர்தான்.