மருந்து சீட்டை பெரிய எழுத்தில் எழுத  டாக்டர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஒடிசா மாநில உயர்நீதிமன்றத்தில், ஒரு வழக்கில் சம்மந்தப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கே. பானிகிராகி முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கு தொடர்பாக, டாக்டர் எழுதி இருந்த குறிப்புகள், நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதப்பட்டிருந்தன.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி ,’’ டாக்டர்கள் எழுதும் மருந்து சீட்டுகள் ( PRESCRIPTION) புரிந்து கொள்ள முடியாத வகையில் உள்ளன. நோயாளிகள், மருந்தாளுநர்கள், போலீசார், வழக்கறிஞர்கள், ஏன், நீதிபதிகளாலும் சில நேரங்களில் டாக்டர்கள் எழுத்து புரிவதில்லை’’ எனக் குறிப்பிட்டார்.

‘’புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதுவது, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடுகிறது.எனவே டாக்டர்கள், மருந்து சீட்டில் (PRESCRIPTION) தெளிவாக- புரியும் வகையில் , பெரிய எழுத்தில் (  CAPITAL LETTERS) எழுதுவது முக்கியம் என இந்த நீதிமன்றம் கருதுகிறது’’ என தெரிவித்த நீதிபதி பானிகிராகி’’ இது தொடர்பாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலாளர் , இந்திய மருத்துவ கவுன்சிலுடன்  ஆலோசித்து, டாக்டர்களுக்கு ’சர்க்குலர்’ அனுப்ப வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

-பா.பாரதி.