புவனேஸ்வர்
ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் எதிர்க்கட்சி தலைவரக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலோடு நட்ந்த ஒடிசா சட்டமன்ற தேர்தலி 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் தோல்வியைத் தழுவியது. 147 தொகுதிகளில் 78 தொகுதிகளை கைப்பற்றி ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது.
அம்மாநில முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார். நேற்று புவனேஸ்வரில் பிஜூ ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நவீன் பட்நாயக் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நவீன் பட்நாயக் இது குறித்து செய்தியாளர்களிடம்,
“பிஜூ ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். என்னை அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர்.
தவிர மூத்த எம்எல்ஏ பிரசன்ன ஆச்சார்யா எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பிரமிலா மாலிக், எதிர்க்கட்சித் தலைமை கொறடாவாகவும், பிரதாப் கேஷரி தேப் துணை கொறடாவாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்”
என்று தெரிவித்தார்.