டாக்கா:
ங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 46 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா – வங்கதேசம் அணிகள் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போடி, வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.