சென்னை; அக்டோபர் 14ந்தேதி சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பாலசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு மிதமான மழை பெய்யும். நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அக்டோபர் 14ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன், சென்னையில் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுர், ராண்ப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தினார்.
மத்திய அரபிக் கடல் பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனலால், அக்டோபர் 12 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா-கோவா கடற்கரையில் நீடிக்கிறது. இது அடுத்த சில நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 12-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 14-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 15 மற்றும் 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.,11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (அக்.12) திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.
அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் டெல்டா மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றவர், இந்த முறை நிறைய காற்றழுத்தங்கள் உருவாகும்‘ வாய்ப்பு உள்ளது என்றார்.
இதுகுறித்து கூறிய தனியார் வானிலை ஆய்வாளர், ஸ்ரீகாந்த் , இந்த ஆண்டு (2024 ஆம் ஆண்டு) வரலாற்றில் இதே மாதிரி இருக்கக் கூடிய ஆண்டுகளை ஒப்பிட்டு பார்த்தால் மழை இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 2024 ஆம் ஆண்டை போல் 1964, 2005, 2010, 2016, 2020 ஆகிய ஆண்டுகள் இருந்துள்ளன. இந்த ஆண்டுகளில் எல்லாம் மழை பொழிவு அதிகமாவே இருந்தது. இந்த ஆண்டுகளில் ஏதோ ஒரு நிகழ்வுகள் அந்தந்த ஆண்டுகளை ஹைலைட்டாக வைக்கும் அளவுக்கு இருந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டியவர், கடநத் 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் வந்த புயல், 2005 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பெருவெள்ளம் இருந்தது. 2010 இல் சென்னையில் மழை இல்லாவிட்டாலும் இயல்புக்கு அதிகமாக 80 சதவீதம் அதிக மழை பெய்தது. 2016ஆம் ஆண்டு சென்னையில் வர்தா புயல் வந்தது. அது போல் மழை மிகவும் குறைந்த ஆண்டுகளும் இருந்துள்ளன. ஆனால் 2024 ஆம் ஆண்டு நல்ல மழை பெய்யலாம் என்பதைத்தான் பேட்டர்ன்கள் சொல்கின்றன இந்த ஆண்டு 5 முதல் 7 வெப்பச்சலனங்கள் உருவாகும். அதில் 2 அல்லது 3 புயல்களாக மாறும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.