சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் இன்றுமுதல்வர் ஸ்டாலினை முன்னாள்முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இதுஅரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒபிஎஸ் உள்பட அவரது அணியினர் விரைவில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே கடந்தஆண்டு ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இதையடுத்து இன்று மீண்டும் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது அரசியல் களத்தில் தனித்து விடப்பட்டுள்ள ஓபிஎஸ், விரைவில் திமுகவில் இணைவார் என தகவல்கள் பரவி வரும் நிலையில், இன்று ஒபிஎஸ் முதல்வரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பயணித்து வந்த தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்து, அதிமுக – பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், இதுவரை அதிமுகவில் சேர்க்கப்படாத சசிகலா, ஓபிஎஸ் தரப்பினர் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு நடந்தது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சசிகலா புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும், திமுகஅரசின் அரசியல் வியூகத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஓபிஎஸ் திமுக கூட்டணியில் சேரலாம் அல்லது, திமுகவில் இணையலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.
[youtube-feed feed=1]