கொழும்பு:

சூதாட்ட புகார் காரணமாக  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக சஸ்பெண்டு செய்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி 10 லீக் போட்டி பங்கேற்ற இலங்கை அணி வீரர்களான  அவிஷ்கா குணவர்த்தனே, நுவான் ஜோய்சா  பங்கேற்றிருந்தனர். அப்போது அவர்கள் இருவர் மீதும் சூதாட்ட புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக நடைபெற்ற முதல்கட்ட விசாரணையை தொடர்ந்து, நுவான் ஜோய்சா  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது சூதாட்ட புகார் காரணமாக குணவர்த்தனேவையும் இடைக்கால தடை செய்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

குற்றச்சாட்டு தொடர்பாக  14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி இருவருக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது.

இலங்கைஅணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் நுவான் ஜோய்சா 30 டெஸ்ட் மற்றும் 95 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதுபோல குணவர்த்தனே 6 டெஸ்ட் மற்றும் 61 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

[youtube-feed feed=1]