உணவுப் பொருளில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் குறிக்கும் நியூட்ரி-மார்க் லேபிள்கள் அனைத்து உணவுப் பாக்கெட்டுகள் மீதும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அபுதாபியில் உள்ள தரக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

2025ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர்கள் நியூட்ரி-மார்க் லேபிளுடன் கூடிய புதிய பாக்கெட்டுகளை தயாரிக்க ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளனர்.

அதன்பின், நியூட்ரி-மார்க் லேபிள் இல்லாத உணவுப் பாக்கெட்டுகள் கடைகளில் இருந்து அகற்றப்படும் என்று கூறியுள்ள சுகாதார அதிகாரிகள், முதலில் பால் பொருட்கள், எண்ணெய்கள், வேகவைத்த பொருட்கள், பானங்கள் மற்றும் சிற்றுண்டி மற்றும் தானியங்கள் போன்ற குழந்தைகளுக்கான உணவுகளுக்கு இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளனர்.

நியூட்ரி-மார்க் ஒரு குறிப்பிட்ட பொருளின் சத்தான மதிப்பை A முதல் E வரை தரப்படுத்துகிறது, மேலும் A மிகவும் ஆரோக்கியமானது E குறைந்தபட்ச ஆரோக்கியமானது என்று தரப்படுத்தப்படும்.

பிரான்ஸ் உள்ளிட்ட எட்டு ஐரோப்பிய நாடுகளில் ஒத்த தயாரிப்புகளுக்கு இடையே உள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கங்களில் உள்ள வேறுபாடுகளை எடுத்துக்காட்ட ஐந்து வண்ணங்களில் ஊட்டச்சத்து லேபிள் பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பாவைச் சேர்ந்த உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் இதனை தன்னார்வமாக மேற்கொண்டு வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் அபுதாபியில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.