உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 51 ஆயிரத்தை தாண்டியது

Must read

சுவிட்சர்லாந்து:

லக அளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்குப் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 975 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்தி 12 ஆயிரம் பேர் மீண்டுள்ளதாக உலக சுகாதர அமைப்பினர் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன.

உலக அளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்குப் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 975 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்தி 12 ஆயிரம் பேர் மீண்டுள்ளதாக உலக சுகாதர அமைப்பினர் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பிலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 75 பேரும் டெல்லி தப்லீ-இ ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2 ஆம் இடத்திற்கு வந்துள்ளது.

More articles

Latest article