
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில், நிர்வாண நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில், 4 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்திலுள்ளது அன்டியோக் நகரம். இதன் புற நகர் பகுதியில் வாஃபிள் ஹவுஸ் என்ற ரெஸ்டாரண்ட் உள்ளது. அங்கு அந்நாட்டு நேரப்படி 03:25 மணிக்கு நிர்வாணமாக வந்த இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த AR-15 வகை தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார்.
இதில் நால்வர் பலியானார்கள். அங்கிருந்த ஒருவர் சமயோஜிதமாக செயல்பட்டு அந்த நிர்வாண நபரிடம் இருந்த துப்பாக்கியை பறித்தார். பிறகு அந்த நபரை பலரும் சேர்ந்து பிடித்து வைத்தனர். காவல்துறை வந்ததும் ஒப்படைத்தனர்.
அந்த நிர்வாண நபர் குறித்தவிவரங்கள் வெளியிடப்படவில்லை.
Patrikai.com official YouTube Channel