சென்னை: நாதகவின் முன்னாள் நிர்வாகியும்,  ஸ்டார் பேச்சாளருமான காளியம்மாள் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

சீமானின் நாம் தமிழர் கட்சியின் ஸ்டார் பேச்சாளரான காளியம்மாள் குறித்து சீமான் விமர்சனம் செய்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், எந்த கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இன்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார்.

காளியம்மாள் இன்று காலை  சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து தன்னை  அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டார்.

காளியம்மாள், நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். மேலும் அக்கட்சியின் ஸ்டார் பேச்சாளராகவும் இருந்து வந்தவர், சீமான் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், சுமார் ஓராண்டு காலமாக அவர் எக்கட்சியில் சேருவார் என எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில், இன்று காலை  சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள், தான் கடந்த 2010ம் ஆண்டே அதிமுகவில் மாவட்ட பொறுப்பில் இருந்தேன் என்பதை சுட்டிக்காட்டியவர், தறபோது பதவி வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார்.

[youtube-feed feed=1]