சென்னை
நாம் தமிழர் கட்சியில் வீரப்பன் மகள் வித்யாராணிக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாதக வில் சேர்ந்து ஓராண்டு நிறைவடையாத நிலையில், வித்யாராணிக்கு நாதகவில் முக்கிய பதவி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து,
”சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, 207-வது வாக்கத்தைச் சேர்ந்த வித்யா வீரப்பன் (18574358150) , நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், சுடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்புகிறேன்.”
என அறிவித்துள்ளார்.