டெல்லி: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் 2020 – வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமை (National Testing Agenc) யுஜிசி நெட் 2020 ( National Eligibility Test) தேர்வு முடிவை இணையதளத்தில் இன்று வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உதவி பேராசிரியர் தகுதித்தேர்வான யுஜிசி நெட் தேர்வானது கொரோனா ஊரடங்கு காரணமாக செப்டம்பர் 24 மற்றும் நவம்பர் 13ந்தேதி அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதி உள்ளனர். அதாவது, 5,26,707 பேர் தேர்வு எழுதினர். ஆனால், 47,157 பேர் மட்டுமே தேர்ச்சி. தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்ச்சி விகிதம் 8.9 சதவிகிதம் மட்டுமே.
தேர்வுமுடிவுகள் https://ntaresults.nic.in/resultservices/UGCNet-auth-June-2020 இணையதளத்தில் பார்க்கலாம்.
UGC NET தேர்வு முடிவுகள் 2020:
- https://nta.ac.in/இல் NTA UGC NET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்
- ‘View Results- UGC NET June 2020’ என்ற இணைப்பைக் கிளிக் செய்வும்
- தேர்வர்கள் தங்கள் விண்ணப்ப எண்/ ரோல் எண், பிறந்த தேதி, security pin or Captcha ஆகியவற்றை பதிவிடவும்.
- ‘Submit’’ என்பதை கிளிக் செய்து, யுஜிசி நெட் 2020 ஜூன் முடிவு திரையில் காண்பிக்கப்படும்.