டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணாக்கர்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நீட்2022 தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. மாணவர்கள் என்டிஏ வெப்சைட்டில் தேர்வு முடிவுகள், மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்.

neet.nta.nic.in

ntaresults.nic.in

தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி இன்று பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்ததில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.