டெல்லி: யுஜிசி நெட் தேர்வு  கணினிவழியில் நடைபெறும் என  தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல என்சிஈடி தேர்வு, ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை ஆஃப்லைன் வழியாக UGC NET தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கணினி வழியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு, ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும்.

மருத்துவ படிப்புக்காக யுஜி நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல்வேற குளறுபடிகள் எழுந்த நிலையில் யுஜிசி நெட் தேர்வு, நீட் பிஜி தேர்வுகள் உள்பட பல தேசிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு வரும்  ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும்,  சிஐஎஸ்ஆர்-யுஜிசி நெட் தேர்வும் ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

UGC NET, CSIR-UGC NETக்கான புதிய தேர்வு தேதிகளை NTA அறிவிக்கிறது, வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, UGC NET ஜூன் 2024 தேர்வுகள் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை நடத்தப்படும், கூட்டு CSIR UGC NET ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை நடத்தப்படும் மற்றும் NCET தேர்வுகள் ஜூலை 10 ஆம் தேதி நடத்தப்படும்.