சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த எம்.பி.!

Must read

ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்(எம்.பி) ஒருவர் கடையில் சாண்ட்விச் திருடியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.

sandwich

ஸ்லோவேனியா நாட்டின் ஆளும் கட்சியான எல்.எம்.எஸ். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான தரிஹ் கிரஜ்சிச்(54 வயது) என்பவர் லியூப்லியானா பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சாண்ட்விச் வாங்க சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குள்ளாக கடையில் இருந்த சாண்ட்விச் ஒன்றை தரிஹ் எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

இதனை தொடர்ந்து எம்.பி.யான தரிஹ் சாண்ட்விச்சை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனது தவறை உணர்ந்த தரிஹ் மன்னிப்பு கேட்டுவிட்டு எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து தரிஹ் கிரஜ்சிங் கூறுகையில், “ கடைக்கு சாண்ட்விச் வாங்க சென்ற போது ஊழியர்கள் என்னை கண்டுக் கொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து, அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்வதற்காக அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்து சென்றேன்.

அப்போது என்னை யாரும் கவனிக்கவும் இல்லை, பிடிக்கவும் முயற்சிக்கவில்லை. ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம் பணத்தை திருப்பி செலுத்த நான் சென்றேன். கொஞ்சம் நேரம் பொறுமையாக இருந்து இருந்தால் எனக்கு இது நேர்ந்திருக்காது” என கூறினார்.

More articles

Latest article