பிரபல பழம்பெரும் திரைப்படநடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர். “கலைவாணர்”என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம் இன்று.( 30 ஆகஸ்ட் 1957 )
இவர் வில்லுப்பாட்டுக் கலைஞராக தன் வாழ்க்கையை துவங்கி, பின்னர் நாடகம் சினிமா என முன்னேறினார்.
1944 ல் நடந்த பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் கொலையில் இவருக்கும் அன்றைய சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதருக்கும் தொடர்பு இருப்பதாககூறி இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தொடர்ந்து நடத்திய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதிசெய்ததால், 1946 ல் இருவரும் தங்களின் வழக்கை லண்டனிலுள்ள ப்ரிவிகௌன்ஸிலு (Privy Council) க்கு எடுத்துச் சென்றனர் .ஏப்ரல் 1947 ல் ப்ரிவிகௌன்ஸில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மறுபரிசீலனை செய்து, தியாகராஜபாகவதரையும், N.S.கிருஷ்ணனையும் ஏப்ரல் 1947 ல், விடுதலை செய்தது.
ஒரு காலத்தில் ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் ஆச்சரியத்தோடு வியந்து பார்த்த வீடு அது.கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுப்பப்பட்ட முதல் கான்கிரீட் வீடும் அதுதான். மொசைக் தரை போட்ட அந்த வீட்டை பார்க்க மாட்டு வண்டி கட்டி வந்தவர்களும் அதிகம். வீட்டு கிரகப்பிரவேசம் அன்று சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கையே பல ஆயிரங்களை தாண்டும்.
தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் பிறந்து நாடறிந்த திரைப்பட கலைஞர், சிரிப்பு நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது.