டெல்லி

வரும் 22 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் மத்திய நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 9-ஆம் தேதி பதவியேற்றார்.

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடைபெற உள்ள முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  டெல்லியில் வரும் 22-ந்தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து கவுன்சில் உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இதற்கு முன்பு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகளை உள்ளடக்கிய 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது.