டெல்லி: யாரும் கவலை கொள்ள வேண்டாம், நாடு முழுவதும் என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்களின் பதிவு மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார்.
ஜம்முகாஷ்மீர் விவகாரம், தேசிய குடிமக்கள் பதிவு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
என்ஆர்சி எனப்படும் இந்திய குடிமக்களின் தேசிய பதிவு என்பது ஒரு நடைமுறையே. நாடு முழுவதும் கணக்கெடுக்கப்படும், அசாமிலும் தகுந்த நேரத்தில் கணக்கு எடுக்கப்படும். அதை பற்றி எந்த மதத்தினரும் பயப்பட வேண்டாம்.
தேசிய குடிமக்களின் பதிவேட்டில் பதிவேற்ற போதிய ஆதாரங்களை அளிக்காதவர்கள் சட்டவிரோதமானவர்கள் என்று உடனடியாக அறிவிக்க மாட்டோம்.
பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தீப்பாயத்தில் முறையிடலாம். அதற்காக அசாம் முழுவதும் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும். இது தவிர, அவர்கள் வெளிநாட்டினர் என்ற வாய்ப்பின் மூலம் பெறலாம். பெயர் விடுபட்டவர்கள், தீர்ப்பாயம், அசாம் அரசை அணுகலாம் என்றார்.