சென்னை
தற்போது சென்னை நகரில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை நகரில் நேற்று இரவு ஒரு சில பகுதிகளில் மழை பெய்த போதிலும் இன்று காலை முதல் நல்ல வெயில் அடித்து வந்தது. வெயில் அதிகம் என்றாலும் தாங்க முடியாத அளவுக்கு வெப்பம் நிலவவில்லை.
இந்நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை, புளியந்தோப்பு, திரு விகே நகர், கொடுங்கையூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது.