சென்னை: தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று கூறிய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை . ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்ற   அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்துக்கு தமிழ்நாடு பதில் தெரிவித்துள்ளது.

ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து, இது குறித்து கட்சித் தலைவர்களே முடிவு செய்வார்கள் என செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் நீடிக்கும் காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் தேர்தலில் தங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, “கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்பதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த முறை, தவெக  ஆட்சியில் பங்கு  என கூறி மற்ற அரசியல் கட்சிகளுக்கு குறி வைத்துள்ளது. இதை ஆமோதிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர், ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என கூறி வருகின்றனர். இது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது என அமைச்சர் பெரியசாமி கூறிய நிலையில், அதற்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பதில் அளித்தார்.   ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ.பெரியசாமியின் சொந்தக் கருத்தாக இருக்கலாம். ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்க வாய்ப்புண்டு.

ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்துதான் இறுதி முடிவை எடுப்பார்கள் என்றார்,

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்போது வரும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று அவர் பதிலளித்தார்.

[youtube-feed feed=1]