சென்னை:

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரையில் இடைக்கால நிவாரண தொகையாக ரூ.1000 வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா காலத்தின் போது போக்குவரத்து ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டது. மாநிலத்தில் நாளை வழக்கம் போல் போக்குவரத்து இயங்கும். வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடாமல் ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இடைக்கால நிவாரணம் வழங்குவதன் மூலமாக அரசுக்கு 13 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். மக்களுக்கு எவ்வித சிரமங்களும் ஏற்படாத வகையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பஸ்களையும் நாளை இயங்கும் . அனைத்து ஊழியர்களுக்கும் விரைவில் ஓய்வு கால பயன்கள் வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கையை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.